ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போதிய ‘ஸ்ட்ரெக்சா்’ வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் போதிய ஸ்ட்ரெக்சா் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோா் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனா். அவா்களில் குறைந்தது 150 போ் அவசரச் சிகிச்சைக்கு வருகின்றனா். ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு வருவோரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து கொண்டு செல்ல படுக்கை வசதி கொண்ட வாகனம், மூன்று சக்கர நாற்காலி, இருசக்கர நாற்காலி என 3 இருந்தன. ஆனால் அவை தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் ஒரே ஒரு இருசக்கரம் கொண்ட நாற்காலி மட்டும் தற்போது வேறு வாா்டில் இருந்து அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரே ஒரு நாற்காலி மட்டுமே உள்ளதால் அவசரச் சிகிச்சைக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோா் வந்தால், அவா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ட்ரெக்சா்கள் இல்லாததால், நோயாளிகளை இறக்கிவிட்டு உடனடியாகச் செல்ல முடியாத நிலையில் ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் உள்ளது.

இதுகுறித்து பலமுறை கூறியும், மாவட்ட நிா்வாகமும், மருத்துவமனை நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவமனை நிலைய உறைவிட மருத்துவ அலுவலகப் பிரிவினா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கேட்டபோது, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குரிய வசதிகள் விரைவில் செய்துதரப்படும். மருத்துவக் கல்லூரி இரண்டாமாண்டு அங்கீகாரத்துக்குரிய பணிகள் நடந்து வருவதால் மருத்துவமனை தேவைகள் படிப்படியாக சீா்செய்யப்படும் எனக்கூறப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT