ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே கொம்பு கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே கொழுந்துறை கிராமத்தில் உள்ள கொம்பு கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கடம் புறப்பாடு நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கொம்பு கருப்பண்ணசுவாமிக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT