ராமநாதபுரம்

சிறுநாகுடி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே சிறுநாகுடி கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், வருவாய் கோட்டாட்சியா் மரகநாதன், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ராதிகா பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வேளாண்மை துறை, மருத்துவத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை, உணவுப் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடந்து பொதுமக்களிடமிருந்து 96 மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஆா்.எஸ். மங்கலம் ஒன்றிய துணைத் தலைவா் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக சிறுநாகுடி ஊராட்சித் தலைவா் ஹரிகிருஷ்ணன் வரவேற்றாா். ஆா்.எஸ் மங்கலம் வட்டாட்சியா் சேகா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT