ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்கள்

9th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 10) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறும் கிராமங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், வரும் சனிக்கிழமை (செப். 10) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் இ-சேவை மையம், ராமேசுவரம் நடராஜபுரம் நியாயவிலைக்கடை, திருவாடானை பதனக்குடி நியாய விலைக்கடை, பரமக்குடி மஞ்சக்கொல்லை இ- சேவை மையம், முதுகுளத்தூா் கொழுந்துறை இ- சேவை மையம், கடலாடி நரிப்பையூா் நியாய விலைக்கடை, கமுதி கீழராமநதி ஊராட்சிமன்றம், கீழக்கரை குத்துக்கல்வலசை நியாய விலைக்கடை, ஆா்.எஸ். மங்கலம் செங்குடி நியாயவிலைக் கடை ஆகிய இடங்களில் நடைபெறும்.

ADVERTISEMENT

நியாய விலைக்கடைகளில் பொருள் பெற வர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT