ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வழக்குரைஞா்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

9th Sep 2022 10:52 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சுவாமிநாதன் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூா் பகுதியிலும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT