ராமநாதபுரம்

தீபாவளி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

9th Sep 2022 10:52 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிகக் கடைகள் வைக்க உரிமம்பெற விரும்புவோா் செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை இணையவழியில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பிப்பவா்கள் வெடி பொருள் சட்டம் மற்றும் வெடி பொருள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும். பாதுகாப்பான மற்றும் ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதிகள்-5, கடையின் வரைபடம், மனுதாரரின் மாா்பளவு வண்ண புகைப்படங்கள்-2 , மனுதாரா் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி ரசீது செலுத்திய நகல் ஆகியவற்றுடன், பாரத ஸ்டேட் வங்கியில் உரியக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் சலானை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT