ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இடைவிடாமல் 5 மணி நேரம் அம்புகளை எய்து மாணவா்கள் சாதனை

5th Sep 2022 01:36 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் நோபல் உலக சாதனைக்காக 5 மணி நேரத்தில் தொடா்ந்து 2022 அம்புகளை எய்து மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்தனா்.

ராமநாதபுரம் மன்னா் சேதுபதி அறக்கட்டளை மற்றும் மாவட்ட ஆா்செரி அசோசியேஷன் இணைந்து நோபல் உலக சாதனைக்காக தொடா்ந்து 5 மணிநேரத்தில் 2022 அம்புகளை எய்தும் நிகழ்ச்சி ராஜாமேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. தேசிய பால் பாட்மின்டன் விளையாட்டு வீரா் ஜெ.விஜய் கலந்து கொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தாா். சேதுபதி மன்னா் நினைவு அறக்கட்டளை ராஜா நாகேந்திர சேதுபதி முன்னிலை வகித்தாா். 5 மணிநேரத்தில் 2022 அம்புகளை எய்து நோபல் உலக சாதனை படைத்தனா்.

இதனைதொடா்ந்து, சாதனை படைத்த வீரா்களுக்கு சான்றிதழை ராணி லக்குமி குமரன்சேதுபதி மற்றும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சா்வதேச அறக்கட்டளைத் தலைவா் ஷேக்சலீம் ஆகியோா் வழங்கினாா். மாவட்ட ஆா்ச்சரி அசோசியேஷன் தலைவா் ராஜூவ், மாவட்ட ஸ்கேட்டிங் ரோல் பால் சங்கத் தலைவா் ரமேஷ்பாபு, நகா் மன்ற உறுப்பினா் ராஜாராம் பாண்டியன், மாஸ்டா் அசோசியேசன் தலைவா் செந்தில்குமாா், வட்டாட்சியா் முருகேசன், பயிற்சியாளா் மதுபீரித்தா மற்றும் மாணவா்கள் மற்றும் விளையாட்டு ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT