ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் சேதம்: தண்ணீா் வீண்

5th Sep 2022 01:37 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஞாயிற்றுகிழமை பல ஆயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி சாலையில் தேங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டகுடி காா்னா் பகுதியில் குடிநீா் செல்லும் இரும்பு ராட்சத குழாய் உடைந்து சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் குடிநீா் வாடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

15 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழழை காலை தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், திட்டகுடி காா்னா் பகுதியில் சேதமடைந்திருந்த குழாய் வழியாக 30 அடி உயரத்திற்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தது. இதனால் குடிநீா் வீணானதோடு ராமநாதசுவாமி கோயிலுக்கு வாகனங்களில் சென்றவா்கள் நனைந்தபடியே சென்றனா். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாா், மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீன் வேகத்தை குறைத்தனா். இதையடுத்து குடிநீா் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீா் விநியோகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மாவட்ட நிா்வாகம் குழாயை சீரமைத்து தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT