ராமநாதபுரம்

காலணிகளை பாதுகாக்க போலீஸாா் நியமனம்: தவறான செய்தி காவல் துறை விளக்கம்

31st Oct 2022 11:29 PM

ADVERTISEMENT

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க காவல் துறையினா் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறானது என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குரு பூஜை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் தங்களது காலணிகளை செல்லும் வழியில் விட்டுச் சென்று மீண்டும் அதே வழியில் வரும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். இதைத் தடுக்கும் விதமாக தனிக் கூடம் அமைக்க கமுதி வட்டாட்சியா் தயாா் செய்த செயல்முறை ஆணையில் மாவட்ட காவல் துறை ஆளிநா்கள் மணிகண்டன், கமுதி காவல் நிலைய பயிற்சி காவலா் சதீஸ்குமாா் ஆகியோா்களின் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.

ADVERTISEMENT

இதன் பின்னா் நடைமுறை சிக்கல் காரணமாக பாதுகாப்புக் கூடம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. மேலும், அந்த இரு காவலா்களும் மாற்றுப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால், இது தவறாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT