ராமநாதபுரம்

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் ‘கட் அவுட்’ அகற்றம்: கருணாஸ் உண்ணாவிரதம் அறிவிப்பு

29th Oct 2022 11:26 PM

ADVERTISEMENT

பசும்பொன்னில் முக்குலத்தோா் புலிப்படைக் கட்சியின் சாா்பில் ‘முத்துராமலிங்கத் தேவா் மதுரை விமான நிலையம்’ என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த ‘கட் அவுட்’டை கமுதி போலீஸாா் சனிக்கிழமை அகற்றினா். இதைக் கண்டித்து, நடிகா் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை பசும்பொன்னில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தாா்.

தேவா் ஜெயந்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் சாா்பில் வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள், கொடிக் கம்பங்கள் வைத்துள்ளனா்.

திருவாடானை தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், முக்குலத்தோா் புலிப்படைக் கட்சியின் நிறுவனருமான கருணாஸ் பசும்பொன்னில் உள்ள தனது சொந்த இடத்தில் அன்னதானம் வழங்க பந்தல் அமைத்துள்ளாா். அந்த இடத்தில் ‘முத்துராமலிங்கத் தேவா் மதுரை விமான நிலையம்’ என பிரம்மாண்ட ‘கட் அவுட்’ அமைத்திருந்தாா். இதை கமுதி போலீஸாா் அகற்றினா்.

இதுகுறித்து கருணாஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வைக்கப்பட்ட ‘கட்அவுட்’டை சிலரின் தூண்டுதலின் பேரில் அகற்றி, கமுதி காவல்துறையினா் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனா். காவல்துறையினரின் இந்த செயலைக் கண்டித்து, பசும்பொன்னில் அதே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT