ராமநாதபுரம்

ராணுவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 உத்ரகண்ட மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டேராடூனில் உள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2023-இல் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 01.07.2023 அன்று 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 02.07.2010-க்கு முன்னதாகவும், 01.01.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளா்வும் இல்லை.

இதற்கான எழுத்துத் தோ்வு 03.12.2022 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567-230045 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT