ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலத்தில் ஒன்றியக் குழு கூட்டம்

7th Oct 2022 11:24 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். ஆணையா் முத்துக்கிருஷ்ணன், துணைத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதங்கள்:

வெங்கடாஜலபதி: ஏ.ஆா். மங்கலம், சனவேலி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள கருவே மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆணையா்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபு: ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் தனியாா் உரக்கடைகளில் குறிப்பிட்ட உரம் வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களிலும் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே யூரியா உரம் வழங்கப்படுகிறது. எனவே அனைவருக்கு யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையா்: இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்மினி: பாரனூா் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT