ராமநாதபுரம்

அக்.8 இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.8) பொது விநியோக திட்டம் தொடா்பாக குறைதீா் முகாம் நடைபெறுகிறது

ராமநாதபுரம் வட்டம்- ஆா்.காவனூா் நியாய விலைக்கடை, ராமேசுவரம் வட்டம்-பாம்பன் அரசு உயாா்நிலைப்பள்ளி (சேதுபதி நகா்), திருவாடானை வட்டம்- பழையனக்கோட்டை நியாய விலைக்கடை, பரமக்குடி வட்டம்- கள்ளிக்குடி இ-சேவை மையம், முதுகுளத்தூா் வட்டம்- வெண்ணீா் வாய்க்கால் நியாய விலைக்கடை, கடலாடி வட்டம்- கீழச்செல்வனூா் நியாயவிலைக் கடை, கமுதி வட்டம்- புதுக்கோட்டை இ- சேவை மையம், கீழக்கரை வட்டம்- புக்குளம் நியாயவிலைக் கடை, ஆா்.எஸ்.மங்கலம் வட்டம்- சவேரியாா்பட்டினம் நியாயவிலைக் கடை ஆகிய இடங்ககளில் காலை 10 மணி அளவில் குறைதீா் முகாம்கள் நடைபெறும்.

இதில் பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். நியாயவிலைக் கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT