ராமநாதபுரம்

ராஜா குமரன் சேதுபதி உருவப்படம் திறப்பு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் ராஜா மறைந்த நா.குமரன் சேதுபதி உருவப்படத்தை காதா்பட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தாளாளரும், ராமநாதபுரம் தேவஸ்தான சமஸ்தான பரம்பரை அறங்காவலருமான ராணி ராஜேஸ்வரி நாச்சியாா் தலைமை வகித்தாா். ராஜா நா.குமரன் சேதுபதி உருவப்படத்தை ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா். மதுரை செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வா் சின்னப்பா, முன்னாள் அமைச்சா் அன்வர்ராஜா, ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் காா்மேகம், துணைத்தலைவா் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் கருணாநிதி, பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் ரவிச்சந்திர ராமவன்னி, பொறியாளா் பாஸ்கா் சாமி, மணி, தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியா் அருண் மொழி உள்பட பலா் பங்கேற்றனா். பள்ளியின் செயலா் ராஜா நாகேந்திர சேதுபதி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT