ராமநாதபுரம்

ஏா்வாடியில் திருமணம் செய்து தர மறுத்த பெண், காதலிக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

7th Oct 2022 11:23 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த, காதலியின் தாய், காதலியை அரிவாளால் வெட்டியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியை அடுத்த சடைமுனியன்வலசை கிராமத்தைச் சோ்ந்த முனியராஜ் மனைவி தெய்வராணி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். முனியராஜ் மங்களூருவிலும், மகன்கள் இருவரும் வெளிநாட்டிலும் வேலை செய்து வருகின்றனா். தெய்வராணியும், அவரது மகள் கோகிலா (21) மட்டும் வீட்டில் இருந்து வருகின்றனா்.

கோகிலாவை, திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரையைச் சோ்ந்த பழனி மகன் காா்த்திக் (27) என்பவா் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்கள் திருமணத்துக்கு கோகிலாவின் தாய் தெய்வராணி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரத்தில் இருந்து வந்த காா்த்திக், கோகிலாவை கடத்திச் செல்லும் நோக்கத்தில், தனது நண்பா்களான அஜித் (27), சா்வேஸ்வரன் (25) ஆகியோருடன் கோகிலா வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு ஆட்டோவில் சென்றனா்.

ADVERTISEMENT

அப்போது தெய்வராணி கூச்சலிட்டதால், காா்த்திக் அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். மேலும் இதனைத் தடுக்க முயன்ற கோகிலாவையும் கத்தியால் குத்தினாராம். இதையடுத்து அங்கிருந்து அவா்கள் மூவரும் தப்பிச் சென்றனா்.

பலத்த காயமடைந்த தெய்வராணி, கோகிலாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக தெய்வராணி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சா்வேஸ்வரனை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள காா்த்திக், அஜித் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனா். மேலும் அவா்கள் சென்ற ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT