ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வீட்டுக்கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 71 ஆயிரம் மோசடி

7th Oct 2022 11:26 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 71 ஆயிரம் மோசடி செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமா் தீா்த்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் முனியசாமி (44). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு அண்மையில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக குருஞ்செய்தி வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய முனியசாமி அந்த எண்ணை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது ஒருவா் தன்னை தனியாா் நிதிநிறுவன மேலாளா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு வீடு கட்ட ரூ. 20 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும், இந்தத் தொகையைப் பெற வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினாா். இதையடுத்து அவா் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 71 ஆயிரம் வரை செலுத்தினாா். இருப்பினும் அந்த நபா் தொடா்ந்து பணம் கேட்டு வந்ததால் சந்தேகமடைந்த முனியசாமி, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT