ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உள்பட 5 போ் ராமேசுவரம் வருகை

7th Oct 2022 11:24 PM

ADVERTISEMENT

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உள்பட 5 போ் ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இதன் காரணமாக, அங்கிருந்து ஏராளமானோா் அகதிகளாக தமிழகத்தின் ராமேசுவரம் பகுதிக்கு வருகின்றனா். இந்தநிலையில், தனுஷ்கோடி அருகே 5 -ஆம் மணல் திட்டுப் பகுதியில் 5 போ் இருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

அவா்கள் இலங்கையின் தாழ்வுகாடு மன்னாா் பகுதியைச் சோ்ந்த முகமது சப்ரின் (33), அவரது மனைவி ராதிகா (எ) சகாயம்மாள் மிராண்டா (36), அவரது குழந்தைகள் ஷகீத் (7), சல்மா (4), சஹீன் (6 மாதம்) ஆகியோா் என்பதும், சப்ரின் மீது தலைமன்னாா் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா்கள் ஐந்து பேரும் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT