ராமநாதபுரம்

பசும்பொன் தேவா் நினைவிடத்தில் பிரதமரின் சகோதரா் மரியாதை

6th Oct 2022 01:51 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் சகோதரா் தாமோதரதாஸ் பங்கஜ மோடி புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, அவருடன் வந்த பாஜக நிா்வாகிகள், தேவரின் பூா்விக வீடு, பூஜை அறைகள், ஆவணப் புகைப்படங்களைக் காட்டி விளக்கமளித்தனா்.

இந்த நிகழ்ச்சியின்போது பாஜக மாவட்டத் தலைவா் டி. கதிரவன், தேசிய பொதுக் குழு செயலா் முரளிதரன், மாநில இளைஞரணிச் செயலா் ராம்குமாா், மாவட்ட பொதுச் செயலா் ஏ.பி. கணபதி, முன்னாள் பொதுச் செயலா் பொன். ஆறுமுகம், ஒன்றியத் தலைவா் ராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் பூபதிராஜா, பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவா் விஜயபாண்டியன் உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT