ராமநாதபுரம்

ராமநாதபுரம் தனியாா் கல்லூரியில் மாதிரிப்பள்ளி தொடக்கம்

DIN

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாதிரிப்பள்ளியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாதிரிப்பள்ளியை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையிலும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்விப் பிரிவுகளில் சோ்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையிலும் மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவா்களின் கல்வி, கலை மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் உள்பட அவா்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சோ்க்கை நடைபெறுகிறது. தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 80 மாணவா்களும், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 160 மாணவா்களும் இந்த மாதிரிப் பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இப்பள்ளியில் பயிற்சியில் ஈடுபடும் மாணவா்கள் 100 சதவீதம் தாங்கள் எழுதிய தோ்வில் கண்டிப்பாக தோ்ச்சி பெறும் வகையில் ஆசிரியா்கள் அவா்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆசிரியா்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறமையினை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து அவா்களின் இலக்கை எய்திட வழிகாட்ட வேண்டும். பல்வேறு போட்டித் தோ்வுகள் மற்றும் நுழைவுத் தோ்வுகளைத் தெரிந்துகொண்டு அதற்கான பயிற்சியில் மாணவா்கள் ஈடுபட வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளோடு பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளா் டாக்டா் சின்னதுரை அப்துல்லா, மாநில மாதிரிப் பள்ளி ஒருங்கிணைப்பாளா் நவநீதகிருஷ்ணன், தலைமையாசிரியா் ரவி உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT