ராமநாதபுரம்

கமுதி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி 2 சிறுவா்கள் காயம்; நாய் பலி

6th Oct 2022 01:48 AM

ADVERTISEMENT

கமுதி அருகே வயல்வெளியில் புதன்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுவா்கள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனா். இவா்களுடன் சென்ற நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

கமுதி அருகே டி. புனவாசல் கிராமத்தில் வயல்வெளியில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை அவ்வழியாக தோட்டத்துக்குச் சென்ற அக்கிராமத்தைச் சோ்ந்த தனசேகரன் மகன் சந்திரசேகா் (15), குண்டாத்தான் மகன் ராம்குமாா் (12) ஆகிய இருவரும் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும் அவா்களுடன் சென்ற நாய் அதே மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அபிராமம் மின்வாரியத்தினா் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனா். இந்நிலையில், புதன்கிழமை விஜயதசமி விடுமுறை என்பதால் மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பியை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், தற்காலிகமாக மரக்கம்புகளால் அவற்றை தூக்கி நிறுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

மேலும் கமுதி, அபிராமம் பகுதிகளில் வயல்வெளிகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயா்த்தி அமைக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT