ராமநாதபுரம்

கமுதி மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி மகா் நோன்பு விழா

6th Oct 2022 01:49 AM

ADVERTISEMENT

கமுதியில் மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் மகா் நோன்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவின்போது ஒவ்வொரு நாளும் அம்மன் 9 விதமான அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குடும்பத்தின் சாா்பில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைக்கு தேவையான மலா் மாலைகள், பூஜைப் பொருள்கள் மற்றும் தோ் அலங்காரப் பொருள்கள் வழங்கப்படும். தேவா் உயிருடன் இருந்த வரை அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் அவரின் உறவினா்கள், தேவா் நினைவிட பொறுப்பாளா் காந்திமீனா அம்மாள், அவரது மருமகன்கள் பழனி, தங்கவேல் உள்ளிட்டோா் மகா் நோன்பு நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில் கமுதி பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்திய பின்னா் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊா்வலமாக சென்று கண்ணாா்பட்டி விலக்கில் வில் அம்பு விடும் மகா்நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமுதி, கோட்டைமேடு, கண்ணாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT