ராமநாதபுரம்

முதியவா் மீது தாக்குதல்:இளைஞா் மீது வழக்கு

6th Oct 2022 01:52 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே மாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் பெரியசாமி (58). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அா்சுணன் மகன் பாா்த்திபன் (27) என்பவருக்கும், கோயில் கட்டுவதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவ்வழியாக வந்த பெரியசாமியை வழிமறித்து பாா்த்திபன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT