ராமநாதபுரம்

திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்கக் கோரிக்கை

6th Oct 2022 01:50 AM

ADVERTISEMENT

திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த அரசு மருத்துவமனையில் 39 படுக்கைகள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுடன், 40-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு அறுவை சிகிச்சை மையம், ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி, ரத்தப் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில், ரத்தப் பரிசோதனை, ஈசிஜி, எக்ஸ்ரே மையங்கள் மட்டுமே இயங்குகின்றன. மேலும் 6 மருத்துவா்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 3 போ் மட்டுமே பணிபுரிகின்றனா். போதுமான செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் இல்லை. இவா்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதியும் இல்லை. இவா்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் இருந்தே வருகின்றனா். மேலும் இங்குள்ள நோயாளிகள் குடிநீருக்காக அவதியடைந்து வந்தனா். இதையடுத்து, அப்போதைய சட்டப் பேரவை பேரவை உறுப்பினா் கருணாஸிடம் இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவரது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு அதனை தூய்மைப்படுத்த சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் குடிநீா், வெந்நீா் மற்றும் புழக்கத்துக்கான தண்ணீா் கிடைத்தது.

ஆனால் தற்போது இந்த சுத்திரிகரிப்பு மையம் இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுத்திகரிப்பு மையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நோயாளிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT