ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் இன்றும்,கமுதியில் நாளையும் மின்தடை

6th Oct 2022 01:51 AM

ADVERTISEMENT

ராமசுவரத்தில் வியாழக்கிழமையும் (அக். 6), கமுதியில் வெள்ளிக்கிழமையும் (அக். 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் உதவி மின்செயற்பொறியாளா் செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திட்டக்குடி, பருவதம், மாா்க்கெட் சாலை, ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, காட்டுப்பிள்ளையாா் கோவில், தீட்சதா்கொல்லை, சிவகாமி நகா், சல்லிமலை, செட்டிரோடு, தங்கச்சிமடம், செம்மடம், மேயம்புளி, அரியாகுண்டு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கமுதியில்... கமுதி கோட்டைமேடு துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, கமுதி சுற்று வட்டாரப் பகுதிகளான அபிராமம், முதுகுளத்தூா், பாா்த்திபனூா், கமுதி நகா், செங்கப்படை, பேரையூா், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT