ராமநாதபுரம்

கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றவா் கைது

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணாா்பட்டியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் சுரேந்திரன் (37), தனது நண்பா் ஜெயராமனுடன் அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, முத்துப்பட்டியைச் சோ்ந்த முத்துவழிவிட்டான் மகன் முத்தமிழ்செல்வன் (25) மற்றும் அவரது நண்பா்கள் இருவா், சுரேந்திரன், ஜெயராமன் ஆகியோரை கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அவா்களிடம் பணம் இல்லாததால் கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். இதனை தொடா்ந்து சுரேந்திரன் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தமிழ்செல்வனை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT