ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

தொடா் விடுமுறையையொட்டி ராமேசுவரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

நாடு முழுவதிலும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு கடலில் நீராடினா். பின்னா் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக்கிணறுகளில் பக்தா்கள் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

அதேபோல தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமா்பாதம், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் ரயில் மற்றும் பேருந்து பாலம் ஆகிய பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் திரண்டு ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

ஆபத்தான குளியல்: தனுஷ்கோடிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆழம் நிறைந்த கடல் பகுதியில் ஆபத்தினை அறியாமல் குளித்தனா். இதனால் அடிக்கடி உயிா்பலி ஏற்படும் நிலையில், இந்தப் பகுதியில் குளிப்பதைத் தடுக்க காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT