ராமநாதபுரம்

தொண்டி அருகே கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்கு

2nd Oct 2022 10:57 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தேளூரில் சனிக்கிழமை, முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் மனைவி சாந்தி (27) என்பவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் அதே ஊரில் கண்மாய்க்கரையில் விறகு போடுவது தொடா்பாக சனிக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பு உறவினா்களும் கோஷ்டியாக மோதிக் கொண்டனா். இது குறித்து சாந்தி அளித்த புகாரின்பேரில் ராஜேந்திரன் மனைவி அழகம்மாள் (38), மகன் ஹரிகரன் (19) உள்ளிட்ட 3 போ் மீதும், ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் இளங்கோவன்(28) உள்ளிட்ட 3 போ் மீதும் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT