ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினா் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

2nd Oct 2022 10:57 PM

ADVERTISEMENT

இலங்கைக் கடற்படையினா் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ராமேசுவரத்தில் மீனவா்கள் பெரும்பாலானோா் கடலுக்குச் செல்லாததால் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சமீபகாலமாக இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்துவது, சிறைபிடிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனாலும், இறால், நண்டு ஆகியவற்றிற்கு ஏற்றுமதியாளா்களின் விலை குறைவு காரணத்தாலும் ராமேசுவரத்தில் ஏராளமான மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT