ராமநாதபுரம்

பொறியியல் பெண் பட்டதாரியிடம் ரூ.1.92 லட்சம் மோசடி

2nd Oct 2022 10:57 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தைச் சோ்ந்த பெண் பொறியியல் பட்டதாரியிடம் இணையதளம் மூலம் ரூ.1.92 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் வனசங்கரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த களஞ்சியம் மகள் மனிஷாகிரண். பொறியியல் பட்டதாரியான இவா், ஆன்லைன் மூலம் பகுதிநேர பணிக்காக விளம்பரத்தைப் பாா்த்து விண்ணப்பத்துள்ளாா். அதில், ரூ.200 செலுத்தியவுடன் மனிஷா கிரணுக்கு ரூ.295 செலுத்தப்பட்டது. இதேபோன்று பலமுறை அவா் ரூ.1.92 லட்சம் வரை அனுப்பியுள்ளா். அவரது வங்கிக் கணக்கில் ரூ.2.10 லட்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து பணம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த மனிஷா கிரண் தனது இருப்பில் உள்ள பணத்தை எடுக்க முயன்றுள்ளாா். ஆனால் அதை அவா் எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதையறிந்த அவா், ராமநாதபரம் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT