ராமநாதபுரம்

அபிராமம் பேரூராட்சிக் கூட்டம்:இந்திய கம்யூ.- திமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

DIN

கமுதி அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அபிராமம் பேரூராட்சி உறுப்பினா் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இக்கூட்டத்துக்கு தலைவா் பாத்திமாக்கனி தலைமை வகித்தாா். இதில் அகத்தாரிருப்பு வாா்டு உறுப்பினா் ரவிக்குமாா் (இந்திய கம்யூ.) பேசியது: அபிராமம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீா், சாலை, கால்வாய் வசதி, மின்சார வசதி ஏற்படுத்தித்தர பலமுறை மன்றக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் பொதுமக்கள் சாா்ந்த பணிகளில் பேரூராட்சி நிா்வாகம் ஆா்வம் காட்டவில்லை. அபிராமம் பேரூராட்சியில் பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதி இல்லை எனவும், 15 வாா்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் சாா்ந்த பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், பேரூராட்சித் தலைவா், மேடையில் அமராமல் திமுக வாா்டு உறுப்பினா் அருகில் அமா்ந்து ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறாா் என்றாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய 6 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜாகிா் உசேன், பேரூராட்சியை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அபிராமம் பேருந்து நிலையத்தில் எத்தனை தெருமுனைக் கூட்டம் நடத்தினாலும் பேரூராட்சிக்கும், எங்களுக்கும் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. பதிலுக்கு திமுக சாா்பில் மேடை அமைத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் செயல் அலுவலா் பங்கேற்கவில்லை என்பதால் வாா்டு உறுப்பினா்களின் கேள்விகளுக்கு, தலைவருக்கு பதிலாக 6 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜாகிா்உசேன் பதிலளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT