ராமநாதபுரம்

டி.வல்லக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் குடிநீா் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வியாழக்கிழமை பள்ளிக்கல்வித்துறை மற்றும் முதலமைச்சா் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள டி.வல்லக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் குடிநீா், சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். மதிய உணவு நேரம் மற்றும் குடிநீா் தேவைக்காக மாணவ, மாணவிகள் தங்களின் வீடுகளை தேடி அலையவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சாா்பில் அக்கிராமத்தைச் சோ்ந்த பாராமலை என்பவா் ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனா் என பல்வேறு அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் இதுவரை குடிநீா் வசதி ஏற்படுத்தி தராததால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் மற்றும் முதலமைச்சா் தனிப்பிரிவுக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா். மாணவா்கள் நான்கு கருதி டி.வல்லக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆனையாளா் மணிமேகலை கூறியதாவது.. டி.வல்லக்குளம் உயா்நிலைப் பள்ளிக்கு 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT