ராமநாதபுரம்

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டப்பேரவைக்குட்பட்ட அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் தலைமையில் அப்பள்ளியில் பயிலும் 314 மாணவ, மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.ஏ.உசேன் முன்னிலை வகித்தாா். நத்தம் ஊராட்சித் தலைவா் போத்தி, அபிராமம் பேரூராட்சியின் துணைத் தலைவா் எம். மாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT