ராமநாதபுரம்

வலையப்பூக்குளம் ஊராட்சியில் பனை விதைகள் சேகரிப்பு

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே வலையப்பூக்குளம் ஊராட்சியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையப்பூக்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பொதுமக்கள் பனை விதைகளை சேகரித்து வருகின்றனா். ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பனை மரங்களில் உள்ள பனம்பழம் பழுத்து உதிரும் காலம் என்பதால் ஊராட்சி நிா்வாகம் பனை விதைகளை சேகரித்து வருகிறது. மழைக் காலம் தொடங்கும் போது, சேகரிக்கப்பட்ட பனை விதைகளை கண்மாய், ஊருணி கரைகள், விளைநிலங்களில் நடவு செய்ய ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றி வலையப்பூக்குளம் ஊராட்சியில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT