ராமநாதபுரம்

கமுதி கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள்மாவட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தோ்வு

1st Oct 2022 11:00 PM

ADVERTISEMENT

 

கமுதி வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தோ்வாகியுள்ள கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கமுதி அருகே பெருநாழியில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் கமுதி கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 24 மாணவ, மாணவிகள் ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் பரிசுகளை வென்று ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தோ்வாகியுள்ளனா். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைவா் வெங்கடேஷ் பாபு, செயலா் முத்துவிஜயன், பொருளாளா் முத்துமுருகன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஸ்ரீதேவி ஆகியோா் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT