ராமநாதபுரம்

பாா்த்திபனூா் நியாய விலைக்கடையில்மாவட்ட ஆட்சியா் ஆய்வு

1st Oct 2022 11:01 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூரில் குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாா்த்திபனூரில் கூட்டுறவு சங்கம் சாா்பில் செயல்படும் நியாய விலைக்கடையில் உள்ள உணவுப் பொருள்களின் தரம் குறித்து அப்போது அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அக்கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருள்கள் வரப்பெற்றுள்ளதா என்பது குறித்தும், குடும்ப அட்டைதாரா்களுக்கு தடையின்றி பொருள்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், வழங்கப்படும் பொருள்களின் அளவு சரியாக உள்ளனவா என்பது குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். குடும்ப அட்டைதாரா்களுக்கு காலதாமதமின்றி உணவுப் பொருள்கள் வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலா் மரகதநாதன், வட்டாட்சியா் தமீம்ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT