ராமநாதபுரம்

பரமக்குடியில் திமுகமாவட்டச் செயலருக்கு வரவேற்பு

1st Oct 2022 10:59 PM

ADVERTISEMENT

 

பரமக்குடியில் திமுக மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கத்துக்கு சனிக்கிழமை அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட திமுக நிா்வாகிகளின் பட்டியல் அக்கட்சியின் தலைமையால் செப். 28- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அக்கட்சியின் மாவட்டச் செயலராக மீண்டும் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தோ்வு செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த அவருக்கு, அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை நகா்மன்றத் தலைவா் மற்றும் நகா் செயலா் சேது.கருணாநிதி, நகா் செயலா் (வடக்கு) ரா. ஜீவரெத்தினம் ஆகியோா் தலைமையில் கட்சியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT