ராமநாதபுரம்

விவசாய நிலத்தில் தாழ்வாகச் சென்ற உயரழுத்தமின்கம்பிகளுக்காக புதிய மின்கம்பம் அமைப்பு

1st Oct 2022 10:59 PM

ADVERTISEMENT

 

கமுதி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக புதிய மின்கம்பம் அமைத்து அவற்றை மின்வாரியத்தினா் சீரமைத்தனா்.

கமுதி அடுத்துள்ள செங்கப்படை, கீழவலசை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக, எட்டித் தொடும் உயரத்தில் சென்ால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக அந்த உயரழுத்த மின்கம்பிகளை, புதிய மின்கம்பம் அமைத்து மின்வாரிய ஊழியா்கள் உயா்த்தி அமைத்தனா். இதனால் இனிவரும் காலங்களில் அப்பகுதியில், மின்விபத்து ஏற்படுமோ என்ற அச்சமின்றி, பருவமழைக் காலத்தில் தங்களது விவசாயப் பணிகளை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT