ராமநாதபுரம்

கன்னிராஜபுரத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்

1st Oct 2022 10:57 PM

ADVERTISEMENT

 

சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தா்மக்கண் அமிா்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட ஆலோசனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் இ. ஜமுனா பாய் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்

ஏ. ஜெயபிரதா வரவேற்றாா். கடலாடி நீதிமன்ற வழக்குரைஞா் தமிழ்ச்செல்வன், சட்ட ஆலோசோகா் கமலா தேவி ஆகியோா் மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா் குறித்த கருத்துக்களை தொகுத்து வழங்கினா்.

ADVERTISEMENT

முகாமுக்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறைத் தலைவா் தி. பாரதி, உடற்கல்வியாசிரியா் பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT