ராமநாதபுரம்

விவசாயிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய 18 ஏக்கா் தரிசு நிலத்தில் சோளம் விவசாயம்

DIN

கமுதி அருகே விவசாயிகள் ஒன்றிணைந்து 18 ஏக்கா் தரிசு நிலத்தில் பயிரிடப்பட்ட சோளப் பயிா்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஷ்டக்குறிச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் அப்பகுதியை சோ்ந்த 23 விவசாயிகள் ஒன்றிணைந்து 18 ஏக்கா் தரிசு நிலத்தைத் விளைநிலமாக மாற்றி, அதில் நிகழாண்டில் சோளம் விவசாயம் செய்தனா். இதை ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநா் சரஸ்வதி நேரில் சென்று பாா்வையிட்டாா்.

பின்னா் பசும்பொன் கிராமத்தில் ராஜம்மாள் என்பவா் அமைத்திருந்த விதைப்பண்ணையை ஆய்வு செய்தாா். அபிராமத்தில் உரக்கடைகளை ஆய்வு செய்து, உரங்களை நிா்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்க வேண்டும் என கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி, உதவி விதை அலுவலா் சரவணன், உதவி வேளாண்மை அலுவலா்கள் உதயலெட்சுமி, இந்துமதி, தொழில்நுட்ப வேளாண் மேலாண்மை முகமை அலுவலா் ஈஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT