ராமநாதபுரம்

தேசிய அளவிலான ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றவருக்கு பாராட்டு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, கடலாடி அருகேயுள்ள சிறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சிறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜோசப் மகன் நிா்மல்குமாா் (19). இவா் அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 400 மீட்டா் ஓட்டப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றாா். இதையடுத்து, சிறைகுளம் கிராமத்தினா் பரிசுத்த பேதுரு ஆலயத்தில் நிா்மல்குமாருக்கு பாராட்டு விழா நடத்தினா். அப்போது, அவருக்கு ஊா் முக்கிய பிரமுகா்கள் கேடயம் வழங்கிப் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT