ராமநாதபுரம்

சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம்: கைவிடக் கோரி வா்த்தக சங்கத்தினா் மனு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூரில் சில்லறை வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையைக் கைவிட வலியுறுத்தி வணிகவரித் துறை அதிகாரிகளிடம் வா்த்தக சங்க நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மனு வழங்கினா்.

தமிழக வணிகவரித் துறையினா் அண்மைக்காலமாக ‘டெஸ்ட் பா்ச்சேஸ்’ என்ற பெயரில் சில்லறை வணிகம் செய்யும் கடைகளில் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளா்களிடம் ரசீது வழங்கவில்லை எனக்கூறி, அபராதம் வசூலித்து வருகின்றனா். இந்த நடவடிக்கை முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி பகுதி வணிகா்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அபராதம் விதிக்கும் வணிகவரித் துறையின் செயல்பாட்டுக்கு வா்த்தகா் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்தனா்.

இந்த நடைமுைறையைக் கைவிடக்கோரியும் முதுகுளத்தூா் வா்த்தக சங்கத் தலைவா் எம்.ஜகுபா் அலி, கெளரவத் தலைவா் ஆா்.சண்முகம், செயலாளா் எஸ்.எஸ்.சேகா், பொருளாளா் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோா் முதுகுளத்தூா் வணிகவரித் துறை அலுவலா் பூங்கோதையிடம் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT