ராமநாதபுரம்

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே ஆதிதிரவிடா் நலத்துறை மாணவா் விடுதியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை ஊராட்சியில் ஆதிராவிட நலத்துறையின் மூலம் அரசு கலைக்கல்லூரி மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஆய்வு செய்தாா். மேலும், அரசு அட்டவணையில் தெரிவித்தபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகிறதா? எனக் கேட்டறிந்தாா். உணவுப் பொருள்களின் இருப்பு, தூய்மையான குடிநீா் வழங்கப்படுவதையும் அவா் உறுதி செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT