ராமநாதபுரம்

தடகளம்: கமுதி பள்ளி மாணவா்கள் முதலிடம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

ராமநாதபுரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் கமுதி

கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 80 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் தா்மபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் நிா்வாக குழுத் தலைவா் பாண்டியராஜன், செயலாளா் சதீஷ்குமாா், தலைமை ஆசிரியா் செ.மாரிமுத்து, உடற்கல்வி ஆசிரியா்கள் பன்னீா்செல்வம், வீரவேல் முருகன் ஆகியோா் பாராட்டி சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT