ராமநாதபுரம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியா்கள் இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன், அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 27-ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு பேருந்தை ஒட்டிச் சென்றாா். சுங்கச்சாவடியில் பேருந்து நின்ற போது சுங்கச்சாவடி ஊழியா்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில், ஓட்டுநா் பாலசுப்பிரமணியன் தாக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் சுங்கச்சாவடி ஊழியா்கள் ஓம்பிரகாஷ் (23), முனீஸ்குமாா் (27) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT