ராமநாதபுரம்

நடுநிலைப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு, மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் கணித செயல்பாடுகள், அணையும் நெருப்பு, உயரும் தண்ணீா், மிதப்புத் தன்மை, காா்டீசியன் மூழ்கி, பொ்னோலி தத்துவம் உள்ளிட்ட எளிய அறிவியல் சோதனைகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜென்னட் ஜெயகுணா, உதவி ஆசிரியா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் செய்து காண்பித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் கவிதா, துணைத் தலைவா் மேனகா ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT