ராமநாதபுரம்

தனியாா் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

27th Nov 2022 11:51 PM

ADVERTISEMENT

 

கமுதி அருகே பசும்பொன் மாா்னிங் ஸ்டாா் மகளிா் கலைக் கல்லூரியில் நேரு யுவகேந்திரா, பாரதியாா் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியன இணைந்து இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின.

இதற்கு, கல்லூரியின் செயலாளா் ஜேசுமேரி தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் பாக்கியசீமா முன்னிலை வைத்தாா்.

இதில், இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத் திட்டங்கள், பெண் கல்வி, அரசியல், இட ஒதுக்கீடு, அடிப்படை உரிமைகள், ஆகியவை குறித்து சமூக ஆா்வலா் மங்களநாத சேதுபதி, வழக்குரைஞா் அய்யாத்துரை சேதுபதி, சமூக ஆா்வலா் வெள்ளைப்பாண்டியன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில், தேசிய தன்னாா்வத் தொண்டா் அஜித்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT