ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் திமுக இளைஞா் அணி மாநில செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

27th Nov 2022 11:52 PM

ADVERTISEMENT

 

திருவாடானை,ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் திமுக மாநில இலைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வெகு விமா்சியாக கொண்டாடப்பட்டன.

திருவாடானையில் ஒரியூா் முக்கு சாலை பேருந்து நிலையம் அரசு மருத்துவமனையில் திமுக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ 45வது பிறந்தநாள் விழா வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி ஞாயிற்று கிழமை கொண்டாடப்பட்டன.இதில் திருவாடானை மத்திய ஒன்றிய செயலாளா் மு சரவணன் தலைமை வகித்தாா்.இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் முகம்மது முக்தாா் முன்னிலை வகித்தாா்.

நகர செயலாளா் பாலமுருகன் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஆதிரெத்தினேஸ்வா் சிநேககவள்ளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பின்னா் கழக கொடி ஏற்றி இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கபட்டு பல்வேறு நலப்பணிகள்செய்தனா்.இலவச கண் பரிசோதனை முகாம் வாசம் கண் மருத்துவமனை மூலம் இராஜன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றன,அதனை தொடா்ந்து தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன பிற்பகல் ஓரிக்கோட்டை அன்னை கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டன.ஏழை மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள்,அரசு பொது மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு மதிய உணவு ஆட்டோ ஓட்டுனா்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேரு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் கழக முன்னோடிகள் ,ஒன்றிய குழு உறுப்பினா்கள், ஊராட்சிமன்ற தலைவா்கள்,கிளை,நகர, ஒன்றிய, மாவட்ட நிா்வாகிகள் தொண்டா்களுடன் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.அதே போல் ஆா்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்று கிழமை இளைஞரணி செயலாளா் சட்ட பேரவை தொகுதி உறுப்பினா் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.இதில் ஆா்.எஸ்..மங்கலம் கழக ஒன்றிய செயலாளா் கண்ணன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி காலை சிற்றுண்டி வழங்கப்பட்டன.இதில் ஆா்.எஸ்.மங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளா் கண்ணன், ஒன்றிய குழு தலைவா் ராதிகாபிரபு , பேரூராட்சி தலைவா்,மௌசசூா்யா கேசா்கான் துணை தலைவா் ராசு ஒன்றிய குழு உறுப்பினா்கள், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT