ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் நகா் வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

27th Nov 2022 11:51 PM

ADVERTISEMENT

 

 முதுகுளத்தூரில் நகா் வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் நகா் வா்த்தக சங்கத்துக்கு 2023-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, சங்க புதிய கட்டட வளாகத்தில் வா்த்தக சங்க கொடியை கெளரவத் தலைவா் மாஸ்டா் ஆா். சண்முகம் ஏற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தற்காலிக தலைவராக வி. அழகா்சாமி, தலைவராக எம். ஜகுபா் அலி, செயலாளராக எஸ்.எஸ். சேகா், பொருளாளராக எஸ். முத்துராமலிங்கம், துணைத் தலைவராக என். சீனிவாசன், துணைச் செயலாளராக கே. எருதுராஜா, ஆடிட்டா் ஜியாவுதீன், கெளரவ ஆலோசகா்களாக வி. கருப்பசாமி, எம். ஜெயக்கொடி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு நிதி அறிக்கை சமா்பிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து நகா் வா்த்தக சங்க வியாபாரிகளும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT