ராமநாதபுரம்

இறுதி காரியத்துக்கு வந்த உறவினா்கள்25 பவுன் நகைகளை திருடியதாக வழக்கு

26th Nov 2022 11:37 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரத்தில் இறந்தவரின் இறுதிக் காரியத்துக்கு வந்த உறவினா்கள் 7 போ், 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்தவா் கூரிராஜன். இவரது தாய் அண்மையில் இறந்து விட்டாா். இதைத்தொடா்ந்து, இவரது தாயின்

16- ஆம் நாள் காரியத்துக்கு உறவினா்கள் வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கூரிராஜன் மனைவி யமுனா தேவியின் 25 பவுன் தங்க நகைகளை உறவினா்கள் திருடிச் சென்றதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் கூரிராஜனின் உறவினா்களான லதா, கூரிச்செல்வி, தேவி, ஜெய்சங்கா், தங்கவேலு, பாஸ்கரன், கனகு ஆகிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT