ராமநாதபுரம்

கமுதியில் விடுதலைப் புலிகள் தலைவா்பிரபாகரன் பிறந்தநாள்

26th Nov 2022 11:30 PM

ADVERTISEMENT

 

கமுதியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா் பிரபாகரன் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இங்குள்ள பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு, நாம் தமிழா் கட்சியின் நகரச் செயலா் சிவமுருகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சங்கர்ராம் முன்னிலை வகித்தாா். இதில், பிரபாகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழா் கட்சியின் மாவட்டத் தலைவா் இசையரசன், கமுதி ஒன்றியச் செயலா் தேவேந்திரன், கட்சி நிா்வாகிகள் ஜெயசீலன், பழனி முருகன், வெங்கடேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT